
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால் ஒவ்வொரு தனி நபரும் ஆதார் கார்டு கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்த நிலையில் ஆதார் கார்டு உடனடியாக தேவைப்படும் பட்சத்தில் நாமே எளிதில் மொபைல் மற்றும் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இதற்கு https://myaadhaar.uidai.gov.in/என்ற இணையதள பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை முதலில் பதிவிட வேண்டும். அதன் பிறகு கேப்சாவை குறிப்பிட்டால் ஆதாரில் உள்ள மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அந்த ஓடிபியை உள்ளிட்டதும் டவுன்லோட் ஆகும் ஆதாரை உடனடியாக தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.