இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆன்லைன் மோசடி என்பது தற்போது நாளுக்கு நாள் அதிகமாக உள்ள நிலையில் ஆதார் மூலம் வங்கி கணக்கில் பணம் திருடு போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. AEPS (adhaar enabled payment System )  என்ற முறை மூலம் உங்களின் ஆதார் எண், வங்கியின் பெயர் மற்றும் உங்களின் பயோமெட்ரிக்கை பயன்படுத்தி ஓடிபி இல்லாமல் கூட பணம் பரிமாற்றம் செய்ய முடியும்.

செல்போனில் Maadhar என்ற செயலியை இன்ஸ்டால் செய்து அதில் உங்களை ஆதார் தகவல்களை அளித்து பிறகு பயோமெட்ரிக் லாக் என்ற ஆப்ஷனை ஆக்டிவேட் செய்து விட்டால் இதிலிருந்து நீங்கள் எளிதில் தப்பித்து விட முடியும்.