ரேஷன் கார்டு மூலமாக இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, சமையலெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என்று அறிவிக்க பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு நற்செய்தி வெளியாகி உள்ளது.

அதாவது ஆதார் உடன் ரேஷன் கார்டு இணைப்பதற்கு சமீபத்தில் மத்திய அரசு அறிவித்து இருந்தது. அதன்படி 2024 ஜூன் 30-ம் தேதி அன்று இறுதி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 30ம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுடன்  ஆதாரை இணைப்பதற்கு அருகில் உள்ள ரேஷன் கடை அல்லது பொது சேவை மையத்திற்கு செல்லலாம் அல்லது PDS போர்ட்ட்டலுக்கு சென்று இணைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.