
அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணம். பள்ளி சேர்க்கை முதல் ரயில் டிக்கெட், சிம்கார்டு என அனைத்து விஷயங்களுக்குமே ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆதார் கார்டை எடுக்கும் பொழுது பல தவறுகளை மக்கள் செய்கிறார்கள். இந்த பிரச்சினைகளை சரிசெய்ய ஆதார் அட்டை புதுப்பிக்கும் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஆதார் அட்டையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை திருத்திக் கொள்ளலாம்.
இதற்கிடையில் இந்தியாவில் தனிநபர்களின் கைரேகையை திருடி வங்கி கணக்கில் பணத்தை திருடும் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக ஆதாரில் உள்ள கைரேகைகளை குளோன் செய்து, அதன் வழியே AePS முறையில் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இதனை முன்கூட்டியே தடுக்க ‘மை ஆதார்’ போர்ட்டலில் உள்ள பயோமெட்ரிக் ஆப்ஷனை லாக் செய்து தரவுகளை பாதுகாக்கலாம். இவ்விதம் செய்வதன் மூலம் திருட்டை தடுக்கலாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.