சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்காக இஸ்ரோ ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 மிஷின் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. ஆதித்யா எல் 1 புவி சுற்றுப்பாதையை உயர்த்தும் நான்காவது கட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அதாவது 256 கிலோ மீட்டர் × 121973 கிலோமீட்டர் ஆதித்யா எல் 1 சுற்றுப்பாதையில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி ஐந்தாவது புவி சுற்றுப்பாதையை உயர்த்தும் நடவடிக்கையை இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது. பின்னர் ஆதித்யா எல் 1 பின் தங்கிய புள்ளி 1 நோக்கி நகர்வதாகவும் தெரிவித்துள்ளது.