2009 ஆம் ஆண்டு இயக்குனர் அறிவழகன் மற்றும் நடிகர் ஆதி கூட்டணியில் உருவான திரைப்படம் ஈரம். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது ஆதி மீண்டும் இயக்குனர் அறிவழகனுடன் இணைந்து சப்தம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஹாரர் படமாக உருவாகி இருக்கும் இந்த சப்தம் திரைப்படத்தில் லைலா, சிம்ரன், லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் பிப்ரவரி 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் சப்தம் படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழை வழங்கியுள்ளது.