
18 ஆவது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 77 ரன்களை அடித்தார். தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 25 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி சொந்த மண்ணில் csk வை வீழ்த்தி வெற்றியை பதிவுசெய்தது. பொதுவாக ஐபிஎல் வந்தாலே ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களும் போட்டிகளை நேரில் வந்து பார்ப்பது வழக்கம்.
View this post on Instagram
அங்கு எடுக்கப்படும் போட்டோ மற்றும் வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டு வைரல் ஆக்கி வருவார்கள். இந்த நிலையில் நேற்று நடந்த இந்த போட்டியை காண வந்த சின்னத்திரை பிரபலங்காளான விஜய் டிவி காமெடியன் சரத், பிக் பாஸ் விஷ்ணு, சௌந்தர்யா உள்ளிட்ட பலரும் ஸ்டேடியத்திற்கு வந்திருந்தார்கள். இதனை அடுத்து சென்னை அணி மோசமாக விளையாடியதால் விஷ்ணுவின் தலையில் சரத் துண்டை போட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.