
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பு ரவுண்டானாவில் இருந்து டதி பள்ளி சந்திப்பு நோக்கி ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் தானியங்கி கதவு பெயர்ந்து தொங்கிய நிலையில் இருந்தது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அந்த கதவின் மேல் பகுதி முற்றிலும் உடைந்து கீழ்ப்பகுதி மட்டும் சிறிது பிடிமானத்தோடு தொங்கிய நிலையில் இருந்தது.
அதனை பார்த்ததும் சாலையோர பயணிகள் அச்சத்துடன் இருந்தனர். ஓட்டுனர் பேருந்து நிறுத்தாமல் வேகமாக இயக்கி சென்ற காட்சிகள் வீடியோ பார்ப்பவர்களை பதற வைத்தது. இந்த நிலையில் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பேருந்துகளை டெப்போவில் இருந்து புறப்படும் போதே சோதித்து இயக்க வேண்டும். தரமான பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.