ஏ ஆர் முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான் கான்  வைத்து சிக்கந்தர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் இன்று ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு உலக அளவில் வெளியாகியுள்ளது. படத்தின் வெளியிட்டை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் படம் வெளியாவதற்கு முன்பு இணையத்தில் வெளியாகிவிட்டது. இதனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது . இதற்கிடையில் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் வாங்கி அதை மக்களுக்கு கொடுத்து படத்தை பார்க்க ஊக்குவித்துள்ளார் சல்மான் கான் ரசிகர் ஒருவர். 817 டிக்கெட்டுகளை 1.72 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார்.

அதை மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. பின்பு டிக்கெட் வினியோகம் செய்த அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த தொகை சல்மான்கான் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டு டிக்கெட் இலவசமாக விநியோகம் செய்ய ஊக்குவிக்கப்பட்டதா? என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் தான் தீவிரமான சல்மான்கான் ரசிகன் என்றும் தன்னுடைய சொந்த பணத்தில் டிக்கெட் விலைக்கு வாங்கி இலவசமாக விநியோகிப்பதாகவும் அந்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.