இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா திருமணம் மும்பையில் கடந்த 12ம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், பிரபலங்கள், இந்தியா அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். இதில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கு பெற்று மணமக்களை வாழ்த்தினார்.

அப்போது மணமக்கள் அவரின் காலில் விழுந்து வழங்கினார்கள். இந்நிலையில் மாப்பிள்ளை தோழர்களுக்கு இரண்டு கோடி மதிப்புள்ள வாட்ச் பரிசாக வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர்களான ஷாருக்கான், ரன்வீர் சிங் உள்ளிட்ட மாப்பிள்ளை தோழர்களுக்கு சுமார் 2 கோடி மதிப்புள்ள வாட்ச் பரிசாக வழங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஷாருக்கான், ரன்வீர் உட்பட சிலர் ஒரே மாதிரியான வாட்ச்களை அணிந்து எடுத்த ரிலீஸ் இணையத்தில் பரவி வருகிறது.