மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் (82) இன்று மாரடைப்பால் காலமானார். இந்நிலையில், பாஜக  மூத்த தலைவர் எல்.முருகன், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக பீடத்தின் நிறுவனர் அம்மா #பங்காரு அடிகளார் அவர்கள் உடல் நல குறைவால் தனது 82-ஆம் வயதில் காலமானார், நம் ஆன்மீக பாரத தேசத்திற்கு இது பெரும் இழப்பு.

அனைவருக்கும் ஆன்மீக குருவாய் இருந்து, அனைவரது வளர்ச்சிக்கும் குருவாய் வழிகாட்டியவர் அம்மா பங்காரு அடிகளார் அவர்கள். அவரது குடும்பத்தாருக்கும் பக்தர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.