உத்திரப்பிரதேசத்தில் ஐபோனுக்காக கொடூரம் நடந்து, டெலிவரி ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஹு என்ற நபர், ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஐபோனைக் கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்தார். இதற்காக டெலிவரி ஊழியர் அப்பராசித் குப்தா அந்த வீட்டிற்கு வந்தபோது, சஹு தனது நண்பருடன் சேர்ந்து அந்த ஊழியரை கொலை செய்தார்.

டெலிவரி ஊழியர் இரண்டு நாட்களாக வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் பொலீசில் புகார் அளித்தனர். இதனால், தேடுதல் வேட்டை நடத்திய பொலீசார், சஹுவை கைது செய்துள்ளனர். அவரிடம் நடந்த விசாரணையில் தான் ஐபோனுக்காகவே இந்த கொலைச் செயல் நிகழ்ந்தது என சஹு ஒப்புக் கொண்டுள்ளார்.

ஒரு மொபைல் போனுக்காக நடத்தப்பட்ட இந்த  கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.