ஹைதராபாத்தைச் சேர்ந்த சாய் தேஜா என்பவர் ஸ்விக்கியில் ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணியில் புழு இருந்ததாக புகார் செய்துள்ளார். ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யப்பட்ட இந்த பிரியாணியில் புழுக்கள் இருப்பதாக கூறிய அவருடைய பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கான ஆதாரத்தை இவர் சமூக வலைதளத்திலும் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ஊழியர் ஒருவரிடம் தொடர்பு கொண்டு இது குறித்து கேட்கையில் அவர் கூறிய பதிலில் அதிருப்தி அடைந்துள்ளார்.

இதனையடுத்து குகட்பல்லியில்உள்ள பிரியாணி கடையில் ஆர்டர் செய்வதை தவிர்க்குமாறு பிறருக்கு அறிவுறுத்தி சமூக வலைதளத்தில் ஒரு எச்சரிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அவர்  இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தின் இணையதளத்தில் புகார் செய்ய முயன்றுள்ளார். ஆனால் தேவையான அனைத்து விவரங்களையும் அவர் அளித்த போதும் கணினி கூடுதல் தகவல்களை  பெறுவதால்  சிரமங்களை எதிர்கொண்டு இருக்கிறார்.