இந்திய ரயில்வே நிர்வாகம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலத்தை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைத்து காலையில் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் ஐ ஆர் சி டி சி யின் இந்த அறிவிப்பு தற்போது பங்குச்சந்தையில் எதிர்மறை விளைவுகளை சந்தித்துள்ளது. அதன் பங்குகள் விலை இன்று ரூ.21.70 குறைந்து ரூ‌.870-ல் முடிவடைந்தது. அதாவது ஐஆர்சிடிசியின் வாழ்நாள் உச்சத்தில் 25 சதவீதத்தை இழந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதற்கு முக்கிய காரணம் ஐஆர்சிடிசியின் 80 முதல் 85 சதவீத வருமானம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மூலமாகவே கிடைக்கிறது. ஆனால் தற்போது ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு காலத்தை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக ரயில்வே நிர்வாகம் குறைத்துள்ளது. மேலும் இதன் காரணமாகத்தான் பங்குகள் சரிவடைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.