சென்னை வேளச்சேரி பகுதியில் சதீஷ்குமார் (36) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பைக்கில் கஸ்டமர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று பகல் கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு ஆர்டர் செய்த பொருளை டெலிவரி செய்வதற்காக அவர் சென்றார். அப்போது அந்த வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்ததால் சதீஷ்குமார் பின்பக்க கதவு வழியாக உள்ளே சென்றார்.

அப்போது பாத்ரூமில் ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்தார். இதனை சதீஷ்குமார் ரசித்து பார்த்ததோடு தன்னுடைய செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இதனை அந்தப் பெண் பார்த்த நிலையில் கத்தி கூச்சலிட்டார். உடனடியாக சதீஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே அவர்கள் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர். மேலும் அவருடைய செல்போன் மற்றும் பைக் போன்றவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.