
மராட்டிய மாநிலம் பிம்ப்ரி சின்ச்வாட் நகர் என்னும் பகுதியில் 10 ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் தனது விடுமுறை தினங்களில் மொபைல் போனில் நேரத்தை செலவிடுவது வழக்கம்.அதன்படி அவன் மொபைல் போனில் கேம் விளையாடுவதில் அதிக நாட்டம் கொண்டிருந்தான். இதனை சிறுவனின் பெற்றோர்கள் மிகவும் கண்டித்தனர். ஆனாலும் சிறுவன் கேம் விளையாடுவதில் ஆர்வமாக இருந்தான்.
இந்நிலையில் நேற்று சிறுவன் மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது தனது குடியிருப்பு கட்டிடத்தின் 14 வது மாடிக்கு ஏறி சென்றான். அப்போது அந்த மாணவன் திடீரென அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் சிறுவனின் பெற்றோர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர்களது வீட்டை ஆய்வு செய்த காவல்துறையினர் சிறுவனை அறையில் இருந்து தற்கொலை குறிப்பு ஒன்றை கைப்பற்றினர். மேலும் சிறுவன் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.