
ஓடிடி மற்றும் சமூக ஊடக தளங்களில் ஆபாசமான உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் மத்திய அரசு மற்றும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், உல்லு, ஏஎல்டிடி, எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்), ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Supreme Court issues notice to Centre, Netflix, Amazon Prime, Ullu, ALTT, X (formerly Twitter), Facebook, Instagram, YouTube and others on a PIL seeking direction to Centre to take appropriate steps to prohibit the streaming of obscene content on OTT and social media platforms. pic.twitter.com/wM32jlkqye
— ANI (@ANI) April 28, 2025
நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் ஆகஸ்டின் ஜார்ஜ் மசீக் ஆகியோர் கூறியதில், இது மிக முக்கியமான பிரச்சினை. இதுபோன்ற விவகாரங்களில் நிர்வாகம் மற்றும் சட்டமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
மத்திய அரசின் சட்ட உதவியாளர் துஷார் மேத்தா, தற்போது சில கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன என்றும், கூடுதல் நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். மனுதாரர்கள், தேசிய உள்ளடக்கக் கட்டுப்பாட்டு ஆணையம் அமைக்கப்பட்டு, ஆபாச உள்ளடக்கங்களை தடுக்கும் விதிகள் உருவாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.