மேற்கு ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட தொடர் நில நடுக்கம் அந்த நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் l ஹெராத் மாவட்டத்தின் 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்துள்ளன. மேலும் நிலநடுக்கத்தால் 2000 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் உலககோப்பை போட்டிகளுக்கு தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் நன்கொடையாக வழங்க உள்ளதாக அந்த நாட்டு வீரர் ரஷீத் கான் அறிவித்துள்ளார். அதன்படி ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிந்து வருந்துகிறேன் எனவும் நிதி திரட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.