பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் இடையே கடந்த சில தினங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். அதற்கு பதில் தாக்குதலாக தலிபான்கள் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 19 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் மீது நடத்திய தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்ததாகவும் ஒரு பாகிஸ்தான் வீரர் உயிரிழந்ததாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.