
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பாக அறிக்கை வெளியிட்டுள்ள போக்குவரத்து கழக ஆணையர், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் போரூர் சுங்க சாவடி, சூரப்பட்டு சுங்க சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை ஏற்று இறக்க கூடாது என்றும் மீறும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று எச்சரித்துள்ளார்.