
வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழக பதிவெண்ணிற்கு மாற்றாமல் இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு பலமுறை எச்சரித்திருந்தது. ஆனாலும் விதிகளை மீறி பலரும் வாகனங்களை இயக்கி வருகிறார்கள். தற்போது அந்த வாகனங்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் சிறைப்படுத்தி இருக்கிறார்கள்.
கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் நடந்த வாகன தணிக்கையில் சுமார் ஐந்து ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.