உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் தனிராம் – பிரேமா சவிதா தம்பதி. இத்தம்பதிக்கு மஞ்சுளா, அஞ்சலி, சுதா, ரூபி என நான்கு மகள்கள் இருந்தனர். கடந்த 24ஆம் தேதி தனிராம் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை எடுத்து வந்தவர் கடந்த 27ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த அவரது சடலத்தை எடுத்துக்கொண்டு ஆம்புலன்ஸில் பிரேமா மற்றும் நான்கு மகள்கள் வந்து கொண்டிருந்தனர். அச்சமயம் திடீரென ஆம்புலன்ஸ் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டு பிரேமா சவிதா, மஞ்சுளா, அஞ்சலி, ரூபி என நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சகோதரிகளில் ஒருவரான சுதா மட்டும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பற்றியும் அடையாளம் தெரியாத வாகனம் பற்றியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.