கேரள மாநிலம் திருச்சூரில் இருக்கும் மருத்துவமனை ஒன்றிற்கு பொன்னனியில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸ்க்கு முன்னால் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் ஆம்புலன்ஸ்க்கு வழி விட முயற்சிக்கவில்லை. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஹார்ன் அடித்தும் அந்த கார் வழி விடாமல் சென்றுள்ளது.

இதனால் ஆம்புலன்ஸில் இருந்தவர்கள் இதனை காணொளியாக பதிவு செய்துள்ளனர். இந்த காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு காரின் உரிமையாளரை கண்டுபிடித்துள்ளனர். மேலும் சாலை விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்கு 2.5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.