சென்னையில் கடந்த 5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்டராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையும் திமுக அரசினை எதிர்கட்சிகள் சரமாரியாக விமர்சித்தது. இந்நிலையில் பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து தற்போது தமிழக அரசிடம் சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சென்னையில் செம்பியம் காவல் நிலையத்திற்கு அருகிலேயே ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதை வைத்தே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு  குறித்து குற்றவாளிகளுக்கு எந்த அளவுக்கு பயம் இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

இந்த கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிவாங்குவதற்காகவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கூறியதாக காவல்துறை கூறியுள்ளது. இந்த வழக்கில் சரணடைந்தவர்கள் கூறுவதை அடிப்படையாகக் கொண்டே காவல்துறை வழக்கினை முடிக்க பார்க்கிறது. இதைத் திட்டமிட்டு ஏவியவர்கள் யார்.? அவர்களை இயக்கியவர்கள் யார்.? இதற்கு வேறு காரணம் இல்லை என்ற முடிவுக்கு காவல்துறை வந்துவிட்டதா.? இதற்கு பின்னால் ஆருத்ரா இருக்கிறது என்பதற்கு காவல்துறை நிலைப்பாடு என்ன.? இந்த விவகாரத்தில் பல செய்திகளை உலவ அனுமதித்து அலட்சியமாக இருப்பது ஏன்.? மேலும் திமுகவை பல காலமாக தலித் மக்களுக்கு எதிரான கட்சி என்று பாஜக விமர்சித்து வரும் நிலையில் அதில் படுதோல்வியைதான் சந்தித்து வருகிறது என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.