சென்னை பெரம்பூரில்  பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று படுகொலை செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்  ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணங்கள் இல்லை என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

கொலை நடந்த மூன்று மணி நேரத்தில் எட்டு பேர் கைது செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.மேலும்  மற்ற நபர்களை பிடிப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகளின் காரணமாக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கியை ஜூன் 13ம் தேதியே அவர் திரும்பப்பெற்று கொண்டதாகவும் கூறியுள்ளார்.