
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த கொலை வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் காவல்துறையினர் பலரை வலை வீசி தேடி வருகிறார்கள்.
குறிப்பாக பிரபல ரவுடிகள் சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை தேடி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது கொலை வழக்கில் கைதான 21 பேரின் சொத்துக்களையும் பறிமுதல் செய்வதற்கு காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் வங்கி கணக்கில் உள்ள பணம், அவர்கள் கொலை செய்வதற்கு வாங்கிய பணம், அதன் மூலம் வாங்கிய சொத்துக்கள் போன்றவைகள் தொடர்பாக ஆய்வு செய்ய இருக்கிறார்கள்.