
ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம் தொடர்பாக, போலீசார் 4,982 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். இதில், ஆம்ஸ்ட்ராங்கின் அரசியல் மற்றும் சமூக ரீதியாக வளர்ச்சி அவரின் கொலையின் முக்கிய காரணமாக அமைகிறது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியான நாகேந்திரன் இந்த கொலை சதியை ஒருங்கிணைத்துள்ளார். மேலும், ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு எந்த விதமான தொடர்பும் இல்லை என குற்றப்பத்திரிகை தெளிவுபடுத்தியுள்ளது.
அதே சமயம், ஆம்ஸ்ட்ராங்கின் கொலையின் பின்னணியில் 4 முக்கிய முன்விரோதங்கள் இருந்ததாகவும், இந்த கொலை “ரெக்கி ஆப்ரேஷன்” என்ற பெயரில் சுமார் 6 மாதங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆற்காடு சுரேஷின் மனைவியின் சபதத்தால் இந்தக் கொலை ஒரு வருடத்துக்குள் நடக்க வேண்டும் என்ற விரோத உணர்வு வழிவகுத்ததாக குற்றப்பத்திரிக்கையில் உள்ள தகவல்கள் காட்டுகின்றன.
கொலை சதிக்கான முழு திட்டத்தை செயல்படுத்த 10 லட்சம் ரூபாய் செலவாகியதாகவும், நான்கு முக்கிய முன்விரோதங்கள் குற்றவாளிகளை இந்தக் கொலை திட்டத்தில் ஈடுபடத் தூண்டியது என்றும் குற்றப்பத்திரிக்கை தெரிவிக்கிறது.