
ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல். இவர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தின் போது ஆர்சிபி அணிக்காக வாங்கப்பட்ட நிலையில் தற்போது வரை அந்த அணியில் தான் தொடர்கிறார்.
இந்நிலையில் தற்போது பெங்களூர் அணியில் இருந்து மேக்ஸ்வெல் விலகுவதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கடந்த போட்டிகளில் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடிய அவர் இந்த வருடம் ஆர்சிபி அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக திகழ்கிறார்.
ஏனெனில் 10 போட்டிகளில் விளையாடிய அவர் வெறும் 52 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அவர் மீது முன்னாள் வீரர்கள் பலர் விமர்சனங்களை வைத்தனர். இந்நிலையில் அடுத்த ஐபிஎல் சீசனை முன்னிட்டு மெகா ஏலம் நடைபெறும் நிலையில் மேக்ஸ்வெல் ஆர்சிபி அணியை விட்டு விலக முடிவெடுத்துள்ளாராம்.
இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் அவர் ஆர்சிபி அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அன்பாலோவ் செய்துள்ளார். மேலும் இதனால் தான் தற்போது அவர் ஆர்சிபி அணியை விட்டு வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.