
மும்பையை சேர்ந்த என்ஜினீயர் அமர்சவான் என்பவர் கடந்த ஜூலை 13ஆம் தேதி இ காமர்ஸ் நிறுவனமான அமேசானில் techno phantom V என்ற மொபைலை ஆர்டர் செய்துள்ளார். இதற்காக 54 ஆயிரத்து 999 ரூபாய் பணத்தையும் அவர் செலுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் கழித்து அவருக்கு அமேசானில் இருந்து பார்சல் வந்த நிலையில் அதை திறந்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது அவர் பார்சலை திறந்து பார்த்த போது செல்போனுக்கு பதில் ஆறு தேநீர் அருந்தும் கோப்பைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் அமேசான் மற்றும் விற்பனையாளர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது சரியான பதில் கிடைக்காததால் கோபமடைந்து அமேசான் நிறுவனம் தனக்கு மோசடி செய்துள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.