
சென்னை பூந்தமல்லியில் ஆனந்த் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் zomatoவில் உணவு ஆர்டர் செய்தார். இதற்காக அவர் ரூ.498 பணம் செலுத்தியுள்ளார். அதன் பின் டெலிவரி ஊழியர் அவர் ஆர்டர் செய்த உணவை கொடுத்தார். அதனை பிரித்துப் பார்த்தபோது அவர் ஆர்டர் செய்திருந்த ஊத்தப்பம் மற்றும் தோசை மட்டும் அதில் இல்லை. இதனால் அவர் ஜொமேட்டோ உதவி மையத்தை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் பலன் அளிக்கவில்லை. இதனால் திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் அந்த வாலிபர் இழப்பிடு வேண்டி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்த நிலையில் zomato நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உணவுகளை ஆர்டர் எடுத்து அதை பார்சல் செய்வது சம்பந்தப்பட்ட உணவகங்கள்தான்.
அதை டெலிவரி மட்டும்தான் செய்கிறார்கள். எனவே இதற்கு அந்நிறுவனம் பொறுப்பாகாது என்று வாதிட்டார். ஆனால் இதனை ஏற்க மறுத்த நுகர்வோர் நீதிமன்றம் உணவை ஆர்டர் செய்வதற்கு சொமேட்டோ நிறுவனம் ரூ.73 கட்டணமாக வசூலிக்கிறது என்று கூறினார். எனவே வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் உணவுகளில் அவற்றை உணவகளிடமிருந்து சரி பார்க்கும் பொறுப்பு அந்நிறுவனத்திற்கு இருக்கிறது. எனவே இதற்கு அந்நிறுவனம் தான் முழு பொறுப்பு என்று நீதிபதி கூறினார். மேலும் அந்நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள் ஆர்டருக்கான பணம் ரூ.498-ம் திருப்பி கொடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் வழக்கு செலவுகளுக்காக ரூ.5000 வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.