
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் புகைப்படம் மோகம் என்பது அதிகரித்து விட்டது. எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு செயலை செய்யும்போது அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்வதற்காக புகைப்படங்கள் எடுத்துக் கொள்கின்றன. ஆனால் இதனால் பல ஆபத்துக்கள் ஏற்படுவதை அவர்கள் உணர்வதில்லை.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் அரிச்சினங்குடி அருவியில் மழை வெள்ளம் காரணமாக தண்ணீர் அதிக அளவு கொட்டியதால் 23 வயது இளைஞர் ஒருவர் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரை அருகில் இருந்த மற்றொருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இந்நிலையில் ஒரு கட்டத்தில் அந்த இளைஞர் தனது கால்களை மெதுவாக அசைத்தபோது வழுக்கி கரைபுரண்டு ஓடும் அருகில் அடித்துச் செல்லப்பட்டார். அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
VIDEO | A man died in Karnataka’s Udupi after falling into an overflowing waterfall. pic.twitter.com/gP1q1L6EG7
— Press Trust of India (@PTI_News) July 24, 2023