
கடந்த வருடம் மார்ச் மாதம் ராஜமவுலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் என்று தெலுங்கு திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ராம்சரன் உள்ளிட்ட புகழ்பெற்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் “நாட்டு நாட்டு” பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது.
சர்வதேச அளவில் பிரபலம் அடைந்த இந்தப் பாடலை தற்போது வெளிநாட்டினரும் ரசிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டில் சின்னத்திரையிலும் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமடைந்த நடிகை ஹைனா அமீர் சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் “நாட்டு நாட்டு” பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.