சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பொதுவாகவே விலங்குகள் தனது பசியை போக்கும் உயிரினத்தை அடித்து சாப்பிட நினைக்கும்.

இதனை நாம் பல வீடியோக்களில் பார்த்திருப்போம். சில விலங்குகள் தான் சாப்பிடும் விலங்குகளை ஒரு சில நேரங்களில் காப்பாற்றவும் செய்கின்றன. அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் கொக்கு ஒன்று ஆற்றின் கரையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மீனைப் பார்த்து தன்னுடைய வாயில் எடுத்து சாப்பிடும் என்று தான் இந்த காட்சியில் நினைத்து இருப்பார்கள். ஆனால் கொக்கு அந்த குறித்த மீனை மீண்டும் ஆற்றிலே கொண்டு விடும் பிரம்மிக்க வைக்கும் காட்சி வைரலாகி வருகிறது.