
சிரியாவில் பள்ளி பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
சிரியாவின் தார்க்குஸ் நகரில் ஆதரவற்றோருக்கான பள்ளியிலிருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிகொண்டு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து ஓரன்டஸ் ஆற்றை ஒட்டி இருக்கும் மலை பாதையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். காயமடைந்த நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.