
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் மகிசாகர் என்ற ஆறு ஒன்று உள்ளது. பிரபல சுற்றுலாத்தலமாக திகழும் இந்த ஆற்றில் குளிக்க அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 4 பேர் வந்துள்ளனர். அவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஒருவர் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். நீச்சல் தெரியாமல் தத்தளித்து கொண்டிருந்த அவரை காப்பாற்ற அடுத்தடுத்து மூன்று பேர் சென்ற நிலையில் அனைவரும் ஆழத்தில் மூழ்கினர்.
இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 4 பேரில் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.