
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர்கள் 10 பேர் கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளித்தபோது 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், 4 மாணவர்களின் உடல்களை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பங்களுக்கு CM ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். அதன்படி, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 2 லட்சம் நிதியுதவி, முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை CM தெரிவித்துள்ளார்.