ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். அவரின் இப்பேச்சு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

இந்நிலையில் ஆளுநர் ரவி கருத்துக்கு டைரக்டர் பா.இரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அதாவது “ஆளுநர் தன் வேலையைத் தவிர மற்ற அனைத்து வேலைகளையும் பார்த்து வருகிறார். அவரின் போக்கு மிகவும் மோசமாக இருக்கிறது. தொடர்ந்து ஏதாவது பேசி பொதுசமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். எந்த தகவலின் படி ஆளுநர் இவ்வாறு பேசுகிறார் என்பது தெரியவில்லை. ஆளுநரின் பேச்சு தவறு தான் அதனை ஏற்க முடியாது” என்று கூறினார்.