சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பல அதிசய உயிரினங்கள் ஆழ்கடலில் வாழ்கிறது. இந்த நிலையில் விஞ்ஞானிகள் கடலில் வாழும் உயிரினங்களின் வாழ்க்கை முறைகள், வசிப்பிடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக கடலுக்குள் செல்வார்கள். அந்த வகையில் ஆழ் கடலுக்குள் பெண் விஞ்ஞானி ஒருவர் சென்றுள்ளார். அவர் நீந்தி செல்வதற்கு ஏற்ற ஆடை, பிராணவாயு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் சென்றுள்ளார்.

அப்போது திடீரென வந்த அக்டோபஸ் அந்த பெண் விஞ்ஞானியை வழிநடத்தி அவரது கையைப் பிடித்து இழுத்து சென்றுள்ளது. பின்னர் அக்டோபஸ் முன்னேறி செல்ல பெண் விஞ்ஞானி பின் தொடர்ந்து சென்றுள்ளார். கடைசியாக இரண்டு உலோக கம்பிகளின் நடுவே தரையில் கல் பொருத்தப்பட்ட ஒரு பகுதிக்கு சென்று அதன் பின்புறம் காட்டுகிறது. அந்த கல்லில் ஒரு ஆண் நாய்க்குட்டியுடன் இருக்கும் போட்டோ இருக்கிறது. அந்த படத்தில் இருப்பவர் ஆழ் கடலில் ஆய்வு செய்ய சென்ற நபரின் நண்பருடைய தந்தை என பெண் விஞ்ஞானி வீடியோவில் கூறுகிறார்.

இதுகுறித்து பெண் விஞ்ஞானி கூறியதாவது, உணர்ச்சிவசப்பட்ட தருணம் அது. அந்த புத்திசாலி உயிரினம் என்னை அந்த பகுதிக்கு அழைத்துச் சென்றது. உடனே மனிதரை அக்டோபஸ் அடையாளம் கண்டு கொண்டதா என எனக்குள் ஏராளமான கேள்விகள் எழுந்தது. அதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் அக்டோபஸ் என்ன நினைக்கிறது என என்னால் யூகிக்க கூட முடியவில்லை எனக் கூறினார். அக்டோபஸ் மனிதரைப் பார்த்ததும் அவரைப் போன்ற உருவம் கொண்ட ஒருவரின் புகைப்படம் இருந்த பகுதிக்கு கையைப் பிடித்து அழைத்துச் சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .