
சத்தீஸ்கர் மாநிலம் சிக்கனி தரம்பூர் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் ஆழ்துளை கிணறு தோன்டியுள்ளார். இந்த கிணறு தோண்டி முடிக்கப்பட்டபோது முதலில் தண்ணீர் வந்துள்ளது. ஆனால் அதன் பிறகு யாரும் எதிர்பார்க்காத விதமாக நெருப்பு வர துவங்கியுள்ளது.
24 மணி நேரத்தை கடந்த பிறகும் தொடர்ந்து நெருப்பு எரிந்து கொண்டிருப்பதால் விவசாயி என்ன செய்வது என்று அறியாமல் திகைத்துப் போய் உள்ளார். இயற்கை வாயு காரணமாக நெருப்பு வந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக வந்து பார்த்து செல்கின்றனர்.