தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் ஆவின் நிறுவனம் மிக குறைந்த விலையில் மக்களுக்கு பால் விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில் ஆவின் நிறுவனம் சார்பாக மக்களுக்கு மாதாந்திர அட்டைகள் சலுகைகளுடன் நீண்ட காலமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த அட்டை மூலம் பால் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஆவின் அட்டை மூலம் பால் வாங்கும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோருக்கு பால் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக ஆதார் எண் சேகரிக்கப்படுவதாகவும் இதற்கான பணிகள் மாவட்டம் தோறும் மண்டல வாரியாக உள்ள அலுவலகங்களில் நடைபெற்ற வருவதாகவும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.