
பிரபல ஹாலிவுட் இயக்குனரான டூட் பிலிப்ஸ் என்பவர் ஜோக்கர் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இதில் கதாநாயகனாக ஜாக்குவான் பினிக்ஸ் நடித்திருந்தார். இவரது நடிப்பின் மூலம் இந்த படத்திற்கு உருவான ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம்.
மிகப்பெரிய அளவில் வெற்றியைக் கண்டுள்ள இந்த திரைப்படத்தில் நாயகனாக நடித்த ஜாக்குவார் பினிக்ஸ்க்கு ஆஸ்கார், கோல்டன் குளோப் போன்ற பல விருதுகள் கிடைத்தது. தற்போது இந்த ஜோக்கர் படத்தின் 2 ம் பாகம் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஜோக்கர் 2 படத்தின் ட்ரெய்லரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் இணையத்தில் மிகவும் வைரலாகி ரசிகர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படம் அக்டோபர் 4 ம் தேதி வெளியாகும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
View this post on Instagram