வித்தியாசமான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் இயற்கை மற்றும் விலங்குகள் தொடர்பான வீடியோக்களை அடிக்கடி பதிவிடும் அமேசிங் நேச்சர் என்ற கணக்கில் ஒரு வீடியோ வெளியானது. மேலும் உலகம் முழுவதும் இப்படி இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன் என்ற கேப்ஷனுடன் அந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். ஒரு நபர் அவரது கைகளால் கொரில்லாவுக்கு தண்ணீர் கொடுக்கிறார். அந்த கொரில்லாவும் அழகாக தண்ணீரை குடிக்கிறது. அந்த வீடியோ பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.