
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தங்களுடைய முதல் மாநாட்டை வருகிற 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடத்த இருக்கிறார். இந்த மாநாட்டை முன்னிட்டு பூமி பூஜை சிறப்பான முறையில் நடைபெற்றது. சமீபத்தில் நடிகர் விஜய் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டார். அதன் பிறகு அரசியல் என்றால் என்னவென்று தெரியாது. சும்மா பெயருக்காக வந்த அரசியல் கட்சி என்று பலரும் விமர்சிக்கிறார்கள் என்றும் இவர்களுடைய விமர்சனங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாநாடு அமையும் என்றும் தமிழகத்தில் நாம் தான் என்பதை நிரூபித்து காட்டும் வகையில் மாநாடை நடத்தி காட்டுவோம் என்றும் விஜய் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த நிலையில் அவர் மீது பல்வேறு விமர்சனங்களை கட்சியினர் குவித்து வருகிறார்கள்.
ஒருபுறம் விஜயின் அரசியல் வருகைக்கு பாராட்டுகள் என்பது கிடைத்தாலும் மறுபுறம் விமர்சனங்களும் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் நடித்தும் முதல் மாநாட்டுக்கு தற்போது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் ரங்கசாமி வாழ்த்துக்கள் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய் ஒருமுறை புஸ்ஸி ஆனந்துடன் சென்று முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்துள்ளார். அந்த சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமாக மட்டுமே நடந்தது என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த மாநாட்டை முன்னிட்டு, விஜய்யின் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாடு வெற்றியடையவும், அவர் அரசியலில் மேலும் முன்னேறவும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.