
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியினை தொடங்கியுள்ள நிலையில் வருகின்ற 22-ம் தேதி கட்சி கொடியினை அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார். இதனை முன்னிட்டு நேற்று சென்னை பனையூர் அலுவலகத்தில் 40 அடி உயரத்தில் கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. அதோடு மஞ்சள் நிறத்தில் விஜயின் முகம் பொறித்த கொடியை ஏற்றி விஜய் ஒத்திகை பார்த்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் திடீரென கோட் பட குழுவினருடன் விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்றுள்ளார்.

அவருடன் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியோரும் சென்ற நிலையில் அங்கு பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து விஜய் பூங்கொத்து கொடுத்தார். பின்னர் அவருடைய மகன்களையும் சந்தித்தார். அதோடு வீட்டில் விஜயகாந்த் புகைப்படத்தை பார்த்து வணங்கினார். ஏற்கனவே கோட் படத்தில் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்தில் வரும் நிலையில் அதற்கு ஒப்புதல் வாங்க தான் விஜய் நேரில் சென்றதாக கூறப்படுகிறது. இருப்பினும் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளதால் ஒருபுறம் அரசியல் காரணத்திற்காக சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் விஜயின் திடீர் விசிட் விஜய் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.