
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் சிமெண்ட் மூட்டையை வாலிபர் ஒருவர் பற்களால் தூக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது சுமார் 50 கிலோ எடை கொண்ட சிமெண்ட் முட்டையை அவர் அசால்டாக தூக்கி உள்ளார்.
ஒரு மூட்டையை அவர் பற்களால் தூக்கிய நிலையில் மற்றொரு மூட்டையை முதுகின் மேல் வைத்து சுமந்து செல்கிறார். ஒரே நேரத்தில் இப்படி இரண்டு மூட்டைகளை அவர் தூக்கியதை பார்க்கும்போது அவர் மிகவும் வலுவானவர் என்பது தெரிகிறது. மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வரும் நிலையில் பலரும் அவர் திறமையை பாராட்டி கருத்து தெரிவித்து வருகிறார்கள்