
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் நடிப்பில் கடந்த மாதம் தி கோட் என்ற திரைப்படம் வெளிவந்து 450 கோடிக்கும் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்த நிலையில், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் அமீர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் தி கோட் படத்தை நேரில் சென்று பார்த்ததோடு அந்த படத்தை பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள பதிவில், போன் மூலம் தி கோட் படத்தை பாராட்டியதற்கு நன்றி தலைவா. மனதார பாராட்டியதற்காக மீண்டும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய அன்புக்கு நான் என்றும் உண்மையாக இருப்பேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் விஜய் ஆகியோர் நேரில் சென்று பார்த்தது குறிப்பிடத்தக்கதாகும்.