
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு இன்று வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள லட்சக்கணக்கானோர் திரண்டு வருவதால் விக்கிரவாண்டி பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது. நடிகர் விஜய் நேற்றிரவே மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்று விட்டார். இன்று காலை முதல் கட்டுக்கடங்காத தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் விஜயின் முதல் மாநில மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மாநாடு நடைபெறும் இடங்களில் க்யூ ஆர் கோட் ஸ்கேன் செய்யும் போர்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்கேன் செய்தால் அவர்களுக்கு சான்றிதழ் கிடைக்குமாம். மேலும் நிகழ்ச்சிக்கு வரும் தொண்டர்களின் வருகையை பதிவு செய்வதற்காக இப்படி ஒரு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை மகிழ்விக்கும் விதமாக சான்றிதழ் கொடுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.