கடந்த 2007 ஆம் வருடம் கௌதம் மேனன் இயக்கத்தில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்பொழுது ஆன்ட்ரியா பிசாசு 2 நோ- எண்ட்ரி, கா, மாளிகை போன்ற படங்களில் கமிட்டாகி உள்ளார். இப்படி தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் அதிக படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை ஆண்ட்ரியா பின்னணி பாடல்களும் பாடி உள்ளார்.

இவர் நடிகையாக மட்டுமின்றி பாடகி ஆகவும் ஜொலித்து வருகிறார். தற்போது இசையமைப்பாளர் இமான் இசையில் லெவன் என்ற படத்திற்கு புதிய பாடல் ஒன்றை பாடியுள்ளார். அதன்படி :இக்கட ரா” என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.