இங்கிலாந்தில் வொர்செஸ்டர்ஷயர் அணிக்காக விளையாடி வரும் இளம் கிரிக்கெட் வீரர் ஜோஷ் பேக்கர் (20)  நேற்று காலமானார். வொர்செஸ்டர்ஷயர் கன்ட்ரி கிரிக்கெட் கிளப் அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளது. எனினும் அவரது மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை. ஜோஷ் பேக்கர் U-19 இல் இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். முதல்தர கிரிக்கெட்டில் 36 இன்னிங்ஸ்களில் 43 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கில் 29 இன்னிங்ஸ்களில் 411 ரன்கள் எடுத்தார். அவரது மறைவு சக வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.