
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் அதிக ஃபாலோவர்ஸ் வேண்டும் என்பதற்காகவும் தங்கள் போடும் பதிவுகளுக்கு அதிக லைக்கள் வரவேண்டும் என்பதற்காகவும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வழியை தேர்ந்தெடுப்பார்கள். அவற்றில் ஒன்றுதான் உணவு பற்றி போடப்படும் Food Vlog.
இப்படி ஒரு பதிவு போடுவதற்காக ஒருவர் உணவகம் ஒன்றிற்கு சென்று காணொளி பதிவு செய்தபடி தனக்கு உணவு வேண்டும் என்று ஆர்டர் செய்கிறார். பணத்தையும் அந்த சமயத்திலேயே கொடுத்து விடுகிறார் ஆனால் சிறிது நேரத்தில் அந்த நபரை அழைத்த உணவக உரிமையாளர் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு உடனடியாக கடையை விட்டு செல்லுமாறு அறிவுறுத்தினார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த Vlogger ஏன் என்று காரணம் கேட்க இதுபோன்று உணவை பற்றி கூறுவதாக வந்துவிட்டு முகத்திற்கு நேராக உணவு நன்றாக இருக்கிறது என்று கூறிவிட்டு பின்னர் உணவை குறை கூறினால் எங்களுக்கு அது தொழிலை கெடுக்கும் என்று கூறி உடனடியாக இந்த இடத்தை விட்டு சென்று விடுங்கள் என விரட்டியுள்ளார்.
இந்த காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் பலரும் கடையின் உரிமையாளருக்கு ஆதரவாக தான் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
https://x.com/gharkekalesh/status/1849008633792663880